நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!


எதிர்வரும் காலங்களில், நாட்டின் நிலப்பரப்பிலும், கடல் பிராந்தியங்களிலும் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்து, மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.


இந்த மாதம் முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இதனால், அதிக மழைவீழ்ச்சி மற்றும் காற்று என்பன காரணமாக கடற்றொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட நாட்டின் பொருளாதார வாழ்வாதாரங்களுக்கு பாரிய தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.