கொக்கைன் போதைப்பொருளை பாலில் கலந்து பலரிடம் கொள்ளையிட்ட நபர் கைது!

கொக்கைன் போதைப்பொருளை பாலில் கலந்து பலரிடம் கொள்ளையிட்ட நபர் கைது!


குளிர் பாலில் போதைப்பொருளைக் கலந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.

மானிப்பாயில் சில நாட்களுக்கு முன்பு சலவைத் தொழிலகம் ஒன்றில் உரிமையாளருக்கு பால் வழங்கி அவரை மயக்கி இரண்டு பவுண் நகையைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அத்துடன், மானிப்பாயில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை வாடகைக்கு அமர்த்தி கைதடி எனும் பகுதிக்கு சென்ற ஒருவர் பால் பக்கற்றை வழங்கியுள்ளார். 

பக்கெற்றின் வாய் பகுதியை வெட்டி வழங்கியதால் முச்சக்கர வண்டிச் சாரதி அதனை ஏற்க மறுத்த போது, ஸ்ரோ இல்லாததால் அவ்வாறு செய்யதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் சாரதி அதனைப் பருகிய நிலையில் மயக்கமடைந்துள்ளார்.

அதன்போது முச்சக்கர வண்டி சாரதி அணிந்திருந்த மோதிரம் உள்பட 2 தங்கப் பவுண் நகையை கொள்ளையிட்டு அந்த நபர் தப்பித்துள்ளார். அத்துடன் முச்சக்கர வண்டி சாரதியின் கழுத்தில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் கைதடியைச் சேர்ந்தவர்களால் அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். 

இந்தச் சம்பவம் தொடர்பிலும் வைத்தியசாலை பொலிஸார் ஊடாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் யாழ். மூத்த பொலிஸ் அத்தியட்சகர் லியனகேவினால் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியிடம் வழங்கப்பட்டது.

சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களில் சிசிரிவி பதிவைப் பெற்ற யாழ். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு புத்தூரைச் சேர்ந்த ஒருவரை, நேற்று (07) கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் தான் கொக்கைன் போதைப்பொருளை பாலில் கலந்து வழங்கி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாளை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.