மாகாணங்களிற்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிப்பு!

மாகாணங்களிற்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிப்பு!

Travel restriction

இன்று (10) நள்ளிரவிலிருந்து மாகாணங்களிற்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது.


கொரோனாவைரஸ் துரிதமாக பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன.


மேலும் 30 திகதி வரை இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை, வியாபார இஸ்தலங்களின் உள்ளேறும் மற்றும் அங்கிருக்குப்போர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல், மற்றும் தொற்றுக்கள் அதிகம் காணப்படும் பிரதேசங்களை தனிமைப்படுத்தல் போன்ற பரிந்துரைகள் ஜனாதிபதியினால் பொறுப்பான அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


எவ்வாறெனினும், பொது மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க பொருத்தமான நடைமுறைகள் பேணப்பட வேண்டுமெனவும், இவற்றை நடைமுறைப்படுத்தும்போது அத்தியாவசிய சேவைகள் இடம்பெறுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். 

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.