கண்டி மாவட்டத்தில் சுகாதார விதிமுறையை மீறிய பள்ளிவாசல் ஒன்று பூட்டு!

கண்டி மாவட்டத்தில் சுகாதார விதிமுறையை மீறிய பள்ளிவாசல் ஒன்று பூட்டு!


கண்டி - கம்பளை பிரதேசத்தில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், ஜமாஅத் தொழுகையில் கலந்துகொண்ட சுமார் 25 பேரை 14 நாட்களுக்கு  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதுடன் குறித்த பள்ளிவாசலும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.


மேலும் பள்ளிவாசல் தலைவருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். 


அத்துடன் கம்பளை பிரதேச மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்கு சகலவித ஒத்துழைப்பையும் தருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


தகவல்: தாய் டிவி


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.