அரிசி விலை விரைவில் இரட்டிப்பாகும் சூழ்நிலை!

அரிசி விலை விரைவில் இரட்டிப்பாகும் சூழ்நிலை!

எதிர்காலத்தில் அரிசி மற்றும் காய்கறிகளின் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது என அனைத்து இலங்கை விவசாய சம்மேளனத்தின் செயலாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரங்கள் வழங்கப்படாததாலும், இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்ட காரணத்தினாலே இவ்வாறு விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக, சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்தும் அரசாங்கத்தின் முடிவு நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியைக் குறைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் விவசாயிகளிடமிருந்து இதுவரை சுமார் 50,000 டொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றைய அனைத்து நெல் பங்குகளையும் தனியார் நெல் ஆலை உரிமையாளர்கள் கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக எதிர்காலத்தில் நெல் வர்த்தக தனியார் துறையால் ஆட்சி செய்யப்படலாம் என்றும், மேலும் இவ்வாறான செயல்பாடுகள் காரணமாக அரிசி விலையை கட்டுப்படுத்துவது அரசாங்கத்திற்கு கடினமாக இருக்கும் எனவும், இதனூடாக எதிர்காலத்தில் சந்தையில் அரிசி விலை இரட்டிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.