வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவர்களினது விமான பயணத்திற்கான பரிந்துரை திருத்தம்!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவர்களினது விமான பயணத்திற்கான பரிந்துரை திருத்தம்!


வெளிநாட்டிலிருந்து ஊழியர்களையும் சுற்றுலா பயணிகளையும் நாட்டுக்கு அழைக்கும் போது ஒரு விமான பயணத்திற்கான பரிந்துரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஒரு விமான பயணத்தின் போது 75 பேர் பயணிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும் இதற்கு ஏற்ப சரியான முறையில் இயங்க தவறியமையினால் புதிய திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

75 பயணிகளில் 50 பேருக்கு அறவீடுகள் ஏதும் இன்றி தனிமைப்படுத்தல் வசதி செய்து கொடுக்கப்படும். வெளிநாடுகளில் தொழில் புரிந்துவிட்டு நாடு திரும்புவோருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. ஏனையவர்கள் பணம் செலுத்தி தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

விமானத்தின் ஆசனங்கள் 200 ஆக இருக்குமானால் அவற்றில் 75 பேர் தனிமைப்படுத்தல் முறைக்கமைய நாட்டுக்கு வர வேண்டும். ஏனைய 125 பேர் சுற்றுலா பயணிகளாக இருக்க வேண்டும். இவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.