ஏன் இன்னும் ஞானசார தேரரை கைது செய்யவில்லை? ரிஷாட் பதியுதீனின் மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்!
advertise here on top
advertise here on top

ஏன் இன்னும் ஞானசார தேரரை கைது செய்யவில்லை? ரிஷாட் பதியுதீனின் மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யத் தவறியது குறித்து கேள்வி எழுப்பி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையம் ஞானசார தேரரை தாக்குதல்களுக்கு காரணமானவர்களில் பட்டியலில் ஒருவராக அறிவித்ததாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் திருமதி ஆயிஷா ரிஷாட் குறிப்பிட்டுள்ளார்.


இருப்பினும், ஞானசார தேரர் அல்லது அறிக்கையில் பெயரிடப்பட்ட ஏனையவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.


தனது கணவர் ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபடவில்லை, ஆனால் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் "அவமானகரமான முறையில்" கைது செய்யப்பட்டார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும் அதில், தனது கணவரை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வலியுறுத்தியுள்ளார்.


தனது கணவர் மற்றும் அவரது சகோதரர் இருவரும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.


ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க, ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைக்க கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி தடுப்பு உத்தரவு (Detention Order) பெறப்பட்டது.


இருவரும் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டனர்.


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மேலும் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான தற்கொலை குண்டுதாரர்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுடீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுடீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.


முன்னதாக கைது செய்யப்பட்டவுடன் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் சிஐடியினரால் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டனர்.


எவ்வாறாயினும், மேலதிக விசாரணைகள் தேவைப்படுவதாகவும், இதன் விளைவாக அவர்கள் மேலும் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்திருந்தது.


-எம்.எம் அஹமட்


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.