அபூதாபியில் சுமார் 65 கோடி லாட்டரி டிக்கெட்டை வென்ற இலங்கையர்!

அபூதாபியில் சுமார் 65 கோடி லாட்டரி டிக்கெட்டை வென்ற இலங்கையர்!


இன்று (03) அபூதாபியில் நடைபெற்ற Big Ticket Raffle Draw தொடரில் இலங்கையை சேர்ந்த முஹம்மது மிஷ்பாக் 12 மில்லியன் திர்ஹம் (கிட்டத்தட்ட 64.5 கோடி ரூபா) பணப் பரிசை வென்றுள்ளார்.


துபாயில் குடியிருப்பாளராக வசித்து வரும் முஹம்மது மிஷ்பாக் கடந்த ஏப்ரல் 29 அன்று வாங்கிய டிக்கெட் எண் 054978 இற்கே குறிப்பிட்ட பரிசு கிடைத்துள்ளது.


தற்போது இலங்கையில் வசித்து வரும் மிஷ்பாக் இற்கு தொலைபேசியில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போது அவர், இப்போது ​​நான் இலங்கையில் இருக்கிறேன். நான் விடுமுறையில் இருக்கின்றேன். இது தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.