இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இலங்கை அரசுக்கு கண்டனம்!

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இலங்கை அரசுக்கு கண்டனம்!


தீவிரவாத எண்ணங்களிலிருந்து மக்களை மீட்பது மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி, சிறுபான்மை சமூகங்களை, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை ஓரங்கட்டும் வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


முஸ்லிம் சமூகத்தை திட்டமிட்டு ஓரங்கட்டுவதன் மூலம் அவர்கள் தன்னிச்சையான முறையில் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இணை அமைப்பான சுயாதீனமான மற்றும் நிரந்தரமான மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.


முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா உடையை இலங்கை அரசு தடை செய்துள்ள விடயம் குறித்தது கடும் கண்டனத்தையும் சுயாதீனமான மற்றும் நிரந்தரமான மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


இது சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளை மீறும் வகையில் காணப்படுவதாகவும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் செயலாகும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


இலங்கையின் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும், அதிதீவிர மதவாதக் கொள்ளையிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக, அண்மையில் கொண்டுவரப்பட்ட வன்முறையுடன் கூடி சமூக இணைப்பு மையங்கள் போன்றவை முஸ்லிம்களை தன்னிச்சையாகத் தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு ஏதுவாக அமையுமென அந்த அமைப்பு கூறியுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post