இன்றிரவு முதல் முழு நேர பயணக்கட்டுப்பாடு - வெளியான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றிரவு முதல் முழு நேர பயணக்கட்டுப்பாடு - வெளியான விசேட அறிவித்தல்!

நாளைய தினம் முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மருந்தகங்களை மட்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்றைய விற்பனை நிலையங்கள் ஊடாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதியில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றிரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை வரையான மூன்று நாட்களுக்கு பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மருந்து பொருட்கள் கொள்வனவு செய்ய வேண்டி ஏற்பட்டால் அருகிலிருக்கும் பாமசிக்கு சென்று கொள்வனவு செய்வதற்கு அனுமதியுள்ளது.

பொதுப்போக்குவரத்துக்களான ரயில், பஸ் சேவைகள் எவையும் பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் இடம்பெறாது. வர்த்தக நிலையங்கள், சுப்பர்மார்க்கெட்டுக்கள் அனைத்தும் மூடப்படும்.

வாடகை கார், வாடகை முச்சக்கரவண்டி சேவைகள் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலப்பகுதியில் இடம்பெறாது. சுகாதாரம், மின்சாரம், நீர்வழங்கல், தொலைத்தொடர்பு,துறைமுகம், விமானம், ஊடகம் மற்றும் தனியார் பாதுகாப்பு ஆகிய துறையைச் சேர்ந்தவர்கள் தமது தொழிலை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவன அடையாள அட்டையை காண்பித்து பயணிக்க முடியும்.

தொழிலுக்கான உறுதிப்படுத்தலை காண்பிக்காத பட்சத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். வீதி மற்றும் பாலங்களை நிர்மாணிக்க முடியும். விவசாயத்தை மேற்கொள்வதற்கு தமது எல்லைக்குள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள். அதனைவிடுத்து பெருந்தெருக்களில் பயணிக்க அனுமதியில்லை.

உணவகங்களில் இருந்து (தொலைபேசி வாயிலாக கிடைக்கும் கட்டளைக்கு ஏற்ப) வீடுகளுக்கு உணவு விநியோகிக்க முடியும். இதனை தமது ஊழியர்களை மாத்திரம் கொண்டு மேற்கொள்ளமுடியும். எனினும், அப்பகுதியிலுள்ள பொலிஸ்நிலையத்துக்கு முன்னறிவித்தல் மேற்கொண்டு, தாம் உணவு விநியோகிக்கும் வாகனம் தொடர்பிலும் அறிவிக்க வேண்டும்.

இதேவேளை, மெனிங் சந்தை, பேலியகொடை மீன் சந்தை உள்ளிட்ட அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும் எனினும், இந்த கட்டுப்பாட்டு காலப்பகுதியில் மொத்த வணிகங்களை மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்றும் சில்லறை வணிகத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.