நாட்டில் சுமார் 76 ஆயிரம் வீடுகளுக்கு மின்துண்டிப்பு! தொடர்ந்தும் ஏற்படும் சாத்தியம்!

நாட்டில் சுமார் 76 ஆயிரம் வீடுகளுக்கு மின்துண்டிப்பு! தொடர்ந்தும் ஏற்படும் சாத்தியம்!


நாட்டில் நிலவும் மழை மற்றும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக சுமார் 76 ஆயிரம் வீடுகளில் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.


மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.


தம்புள்ளை, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, ஹொரணை, இங்கிரிய, பலாங்கொடை மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளில் இவ்வாறு மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் இன்று (26) கூறியுள்ளார்.


பல்வேறு பிரதேசங்களில் கடும் காற்று வீசி வருவதால் தொடர்ந்தும் மின்சார துண்டிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மின்துண்டிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு விசேட குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.