பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்!

பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்!


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் இன்று முதல் பதினான்கு நாட்களுக்கு சுயதனிமை படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இன்று (26) புதன்கிழமை, பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் அயலவர் ஒருவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் அவரை தனது வாகனத்தின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார்.


குறிப்பிட்ட சுகயீனமான நபர் கொறோனா தொற்றாளராக இனம் காணப்பட்டமையினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் பாராளுமன்ற உறுப்பினரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 


இவ் இக்கட்டான சூழ்நிலையின் தாற்பரியங்களை அறிந்து மக்கள் பொறுப்புடன் செயற்படுவது சாலச்சிறந்தது என மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


-மாளிகைக்காடு நிருபர்Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.