மனைவி மற்றும் மருமகளை கோடரியால் அறுத்து கொலை செய்த 70 வயது நபர் கைது!

மனைவி மற்றும் மருமகளை கோடரியால் அறுத்து கொலை செய்த 70 வயது நபர் கைது!


அம்பலாந்தொட - ஹுங்கம, எத்படுவ பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய நபர் தனது மனைவி மற்றும் மருமகளை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த இரு பெண்களையும் வீட்டின் முற்றத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஹங்கம பொலிஸார் கூறுகின்றனர்.


இதில் பலியானவர்கள் ஹுங்கம - எத்படுவ பகுதியில் வசிக்கும் வீரசிங்க பட்டிய கமகே பிரேமாவதி (67) மற்றும் அவரது மருமகள் கீகனகே ரம்யா பிரியதர்ஷனி சந்திரகாந்தி (39) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குற்றம் செய்த 70 வயதான நபர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியுடன் அதே இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.


கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கொழும்பு புறநகர் பகுதியில் வேலை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.