தனிமைப்படுத்தலில் இருந்து 38 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன!

தனிமைப்படுத்தலில் இருந்து 38 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன!

நாட்டில் 6 மாவட்டங்களின் 38 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் 8 கிராம சேவகர் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தின் 16 கிராம சேவகர் பிரிவுகளும், மாத்தளை மாவட்டத்தில் 3 கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவும், வவுனியா மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட நாம்ப முனுவ, கொரகாப்பிட்டிய, பெலன் வத்த வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மொரட்டுமுல்ல பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட வில்லோரவத்தை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

மஹரகம பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட அரவ்வல மற்றும் பமுனுவ கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் கட்டான பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட கே.சி.சில்வபுர கிராம சேகவர் பிரிவும், கதிரன வடக்கு கிராம சேவகர் பிரிவின் எட்டம்பகஹவத்தை பகுதியும் கதிரன தெற்கு பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பேசகர்மா பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

வத்தளை பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட வத்தளை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பனன் கம்மான கிராம சேவகர் பிரிவும் வவுனியா மாவட்டத்தில் பூவரசங்குளம் பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட குருக்கள் புதுக்குளம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.