14 நாட்களாவது நாட்டை முடக்க வேண்டும்!

14 நாட்களாவது நாட்டை முடக்க வேண்டும்!


நாட்டை முழுமையாக இரண்டு வாரங்களேனும் முடக்கினால் மாத்திரமே கொரோனா தொற்று அதிகரிப்பதனை தடுக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நேற்றும் 3,500 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதேபோன்று மும்மடங்கு நோயாளர்கள் சமூகத்தில் இருக்க முடியும். இவர்களின் வாயிலாக மேலும் தொற்று பரவக்கூடலாம். நிச்சயமாக, தற்போதைய நிலைமைக்கு அமைய இரண்டு வாரங்களேனும் நாட்டு மக்களை வீட்டிற்குள் முடக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. 

அவ்வாறு ஒரு நடவடிக்கையினை மேற்கொண்டால் மாத்திரமே கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதனை தடுக்க முடியும். ஒரு வைத்தியர் என்ற வகையில் நான் பரிந்துரைக்கின்றேன். முடக்க நிலை மிக அவசியமாகும் என அவர் வலியுறுத்தினார்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.