🚨 கொரோனா பயணத்தடை - மிக முக்கிய 03 தீர்மானங்கள்!

🚨 கொரோனா பயணத்தடை - மிக முக்கிய 03 தீர்மானங்கள்!

நாட்டில் விதிக்கப்படவுள்ள இரண்டு வெவ்வேறு வகையான பயணக் கட்டுப்பாடுகள் குறித்த கூடுதல் விவரங்களை காவல்துறை அறிவித்துள்ளது.

தினசரி இரவு 11 முதல் மறு நாள் அதிகாலை 04 மணி வரை இன்று முதல் 2021 மே 31 வரை நாடு முழுவதுமாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாளை (13) இரவு 11 மணி முதல் திங்கள் (17) அதிகாலை 04 மணி வரை மூன்று நாள் முழு நேர பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக அமல்படுத்தப்பட வேண்டிய பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பாக காவல்துறை அறிவித்த மூன்று முடிவுகள் பின்வருமாறு.

  • இன்று (12) இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை: நாடு முழுவதுமாக பயணக் கட்டுப்பாடு (ஊரடங்கு உத்தரவு போன்றது). அத்தியாவசிய சேவைகளுக்கு இது பொருந்தாது
  • நாளை (13) இரவு 11 மணி முதல் திங்கள் (17) அதிகாலை 4 மணி வரை: நாடு முழுவதிலும் மூன்று நாட்கள் முழு நேர பயணக் கட்டுப்பாடுகள் (ஊரடங்கு உத்தரவு போன்றவை) அத்தியாவசிய சேவைகளுக்கும் கோவிட் தடுப்பூசி பெற பயணிப்பவர்களுக்கும் பொருந்தாது.
  • தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் தினசரி பயணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது (  நாளை (13) முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரை). ஒற்றைப்படை நாட்களில் தேசிய அடையாள அட்டை கடைசி இலக்கங்களான 1,3,5,7,9 ஆகியோருக்கும், மற்றும் இரட்டைப்படை நாட்களில் தேசிய அடையாள அட்டை கடைசி இலக்கங்களான 0,2,4,6,8 இருப்பவர்கள் மாத்திரமே வீடுகளில் இருந்து வெளியேற முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் இவ்வனுமதியானது  முற்றிலுமாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள மூன்று நாட்களுக்கு பொருந்தாது ( மே 14 முதல் 16 வரை). மேலும்  அத்தியாவசிய சேவைகளுக்கும் அலுவலக வேலைக்கு பயணிப்பவர்களுக்கும் இந்த அமைப்பு பொருந்தாது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.