மொயின் அலி கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் ISISஸில் இணைந்திருப்பார்! -தஸ்லிமா நஸ்ரின்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மொயின் அலி கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் ISISஸில் இணைந்திருப்பார்! -தஸ்லிமா நஸ்ரின்


இங்கிலாந்து கிரிக்கெட் ஆல் ரவுண்டர் மொயின் அலி, கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ்ஸில் சேர்ந்திருப்பார் என பங்களாதேஷிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சிஎஸ்கே அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மொயின் அலியை ஒப்பந்தம் செய்தது.


இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் மொயின் அலி கோரிக்கை ஒன்றை வைத்ததாக தகவல்கள் வெளியாகின. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிந்து விளையாட உள்ள அணியின் ஜெர்சியில் மது வகையை சேர்ந்த லோகோ ஒன்று இடம்பெற்றிருந்தது.


இதை நீக்கும்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் மொயின் அலி கேட்டுக் கொண்டதாகவும், இதற்கு காரணமாக மது அருந்துவதையோ அல்லது மது வகைகளை விளம்பரம் செய்ய விரும்பவில்லை என்று மொயின் அலி குறிப்பிட்டதாகவும் கூறப்பட்டது. 


இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டு அவரது டீசர்ட்டில் இருந்து அந்த மது வகையின் லோகோவை நீக்கியதாகவும் செய்திகள் வெளியானது. 


இந்நிலையில் மொயின் அலி, கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ்ஸில் சேர்ந்திருப்பார் என பங்களாதேஷ் நாட்டு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கருத்து வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


இதையடுத்து பல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் இவரின் டிவிட்டர் கணக்கை முடக்கும் படியும் அவரை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.