இன்று முதல் பொதிகள் வழங்கும் செயற்பாடுகளை நிறுத்த தீர்மானம்!

இன்று முதல் பொதிகள் வழங்கும் செயற்பாடுகளை நிறுத்த தீர்மானம்!


ரயில் நிலையங்களில் கடை நிலை ஊழியர்கள் இல்லாததால் இன்று (07) முதல் பொதிகள் வழங்கும் செயற்பாடுகளை நிறுத்தி வைக்க ரயில்வே நிலைய அதிபர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில் நிலைய முதுநிலை சங்கம் தெரிவித்துள்ளது.


குடை நிலை ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்ப அதிகாரிகள் தவறிவிட்டதாக தொழிற்சங்க தலைமை செயலாளர் கசுன் சாமர ஜெயசேகர தெரிவித்துள்ளார்.


சர்வதேச விதிமுறைகளையும் மீறி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக கடமைகள் வழங்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


பெரும்பாலான ரயில் நிலையங்களுக்கு குறைந்தது ஆறு ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையிலேயே நாளை காலை முதல் பொதிகள் வழங்குவதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக ரயில்வே அதிபர்கள் தொழிற்சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post