துப்பாக்கி பிரயோகம்; நைஜீரிய சிறையிலிருந்து 1,800 கைதிகள் தப்பியோட்டம்!

துப்பாக்கி பிரயோகம்; நைஜீரிய சிறையிலிருந்து 1,800 கைதிகள் தப்பியோட்டம்!


நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகங்களை அடுத்து 1,800 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


நிர்வாகத் தொகுதியை வெடிக்க வைக்க வெடிபொருட்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியவர்கள் தென்கிழக்கு நகரமான ஓவெர்ரியில் உள்ள சிறை முற்றத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆறு கைதிகள் திரும்பி வந்துள்ளதாகவும், 35 பேர் தப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தடைசெய்யப்பட்ட பிரிவினைவாத குழுவான பியாப்ராவின் பழங்குடி மக்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் குற்றம் சாட்டினர். ஆனால் அதனை அவர்கள் மறுத்துள்ளனர்.


1,844 கைதிகள் இமோ மாநில சிறையில் இருந்து தப்பித்ததை நைஜீரியா உறுதிப்படுத்தியுள்ளது.


லொறிகள் மற்றும் பேருந்துகளில் வந்த  ஆயுதம் ஏந்தியவர்கள் திங்கட்கிழமை அதிகாலையில் ஓவர்ரி நகரத்திலுள்ள சிறைச்சாலையை தாக்கினர்.


காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,


தாக்குதல் நடத்தியவர்கள் ரொக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகள், இயந்திர துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை எடுத்துச் சென்றனர்.


நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி இந்த தாக்குதலை, அராஜகவாதிகள் மேற்கொண்ட பயங்கரவாத செயல்  என  கூறியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்களையும் தப்பித்த கைதிகளையும் பிடிக்க பாதுகாப்புப் படையினரை அவர் அழைத்தார்.


இவ்வாண்டில் ஜனவரி மாதம் முதல் தென்கிழக்கு நைஜீரியா முழுவதும் பல பொலிஸ் நிலையங்கள்  மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு ஏராளமான வெடிமருந்துகள் திருடப்பட்டுள்ளன. தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.