ஒரு குடும்பத்துக்கு மூன்று கிலோ அரிசி இரு வாரங்களுக்கு போதுமானது! -பந்துல

ஒரு குடும்பத்துக்கு மூன்று கிலோ அரிசி இரு வாரங்களுக்கு போதுமானது! -பந்துல


நாட்டில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு வாரங்களுக்கு மூன்று கிலோகிராம் அரிசி போதுமானது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


சதொச நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் நிவாரணப் பொதி குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.


மேலும் இந்த நிவாரணப் பொதி நாட்டின் வணிகத் துறையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை சமூக ஊடகங்களில் காணலாம் என்றும், குறைந்த விலையில் பொருட்களைக் கிடைக்கச் செய்ய மற்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


இருப்பினும், சதொச நிறுவனம் மூலம் வழங்கப்படும் தயாரிப்புகள் அதி உத்தரவாதத்துடன் உயர்தர தயாரிப்புகளை அடங்குவதாக தெரிவித்தார்.


மேலும் "ஒரு குடும்பத்திற்கு மூன்று கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ சீனி இதில் அடங்கும், அது சுமார் இரண்டு வார காலத்துக்கு போதுமானதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்று அவர் கூறினார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post