திருட்டுப்போன தொலைபேசிகளை IMEI மூலம் கண்டறிய பொலிஸ் இணையதளத்தில் புதிய வசதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருட்டுப்போன தொலைபேசிகளை IMEI மூலம் கண்டறிய பொலிஸ் இணையதளத்தில் புதிய வசதி!


திருடப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசிகளின் IMEI இலக்கங்களை பொலிஸ் தலைமையகம் தனது இணையதளத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளது.


www.ineed.police.lk எனும் இணையதள முகவரிக்கு சென்று அந்த விபரங்களை பார்வை இட முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


இவ்வாறான நிலையில், ஒருவர் பயன்படுத்திய தொலைபேசியையோ அல்லது புதிதாக ஒரு தொலைபேசியையோ கொள்வனவு செய்யும்போது, முதலில் தான் கொள்வனவு செய்ய உள்ள தொலைபேசியின் IMEI இலக்கத்தைப் பெற்று, பொலிஸ் இணையதளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள திருட்டுப்போன தொலைபேசிகளின் IMEI இலக்கங்களுடன் ஒப்பீடு செய்து தகவல்களை உறுதி செய்து கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.


அவ்வாறு ஒப்பீடு செய்வதன் ஊடாக தான் கொள்வனவு செய்யும் தொலைபேசி சிக்கலுக்கு உரியதல்ல என்பதை ஒருவர் உறுதி செய்துகொள்ள கூடியதாக இருக்கும் என பொலிஸார் கூறுகின்றனர். 


திருடப்பட்ட தொலைபேசிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையிலேயே, பொலிஸார் வீண் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களிடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.


-எம்.எப்.எம்.பஸீர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.