ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் சந்திப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் சந்திப்பு!


இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.


இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன என்று வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அரசமைப்பு சீர்திருத்த செயன்முறை, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான முன்னேற்றம் உள்ளிட்ட பல செயற்பாடுகள் குறித்து அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களுக்கு விளக்கியுள்ளார்.


இதேவேளை, கொரோனா வைரஸ் மற்றும் அதற்குப் பிந்தைய சூழலில் இலங்கையில் சுற்றுலாத்துறையை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான இலங்கை சுகாதார நெறிமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.


பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெர்டு, இத்தாலி தூதுவர் ரீட்டா மன்னெல்லா, ருமேனிய தூதுவரின் தூதரகப் பொறுப்பாளர் விக்டர் சியுஜ்தியா மற்றும் ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி தூதரக தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.