கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது கத்திக்குத்து! பசறையில் சம்பவம்!

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது கத்திக்குத்து! பசறையில் சம்பவம்!


நகர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று பசறை நகரில் இன்று காலை (12) இடம்பெற்றுள்ளது. 


பசறை பஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்ளை அங்காடி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து பொலிஸ் கான்ஸ்டபிள்ளை தாக்கியுள்ளார். 


இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் உடனடியாக பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.


குறித்த தாக்குதலை மேற்கொண்ட அங்காடி வியாபாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். 


பசறையில் பொது மக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் இடையூறுகளை மேற்படி வியாபாரி மேற்கொண்டிருந்ததினால் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த வியாபாரியை எச்சரித்தார்.


இதையடுத்து, ஆத்திரம் கொண்ட அங்காடி வியாபாரி பொலிஸ் கான்ஸ்டபிள்ளை கத்தியால் தாக்கியுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்திருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.