வைத்தியர், ஆசிரியர், பொறியியலாளர், வர்த்தகர் என பல வேடங்களில் மோசடி! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வைத்தியர், ஆசிரியர், பொறியியலாளர், வர்த்தகர் என பல வேடங்களில் மோசடி! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மோசடியில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.


இந்த நபர் தன்னை வைத்தியர், பொறியியலாளர், ஆசிரியர், வர்த்தகர் என இனம்காட்டிக்கொண்டு, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபர் தன்னை வைத்தியராக அடையாளப்படுத்திக்கொண்டு, கொள்ளையடிக்கப்பட்ட வாகனமொன்றை 165 இலட்சத்துக்கு விற்றமை, போலி கையெழுத்தை பயன்படுத்தி 1,550,000 ரூபாய் பெறுமதியான வாகனத்தை பெற்றுக்கொண்டமை, 30 இலட்சம் பெறுமதியான வானை கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சந்தேகநபர் மேலும் பல மோசடிகளில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ள பொலிஸார், இவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


அத்துடன் சந்தேகநபரின் பெயர் ராசிக் மொஹமட் பாருக் என்பதுடன், இவர் இலக்கம்.122/15 பி மாங்கட வீதி, கடவத்த, 133/05 நாமல் டெரன்ஸ், வட்டியகொட, 89/03 ரஜமாவத்த, கனுவன, ஜாஎல ஆகிய முகவரிகளைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார் இவரைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் ரூபாயை அன்பளிப்பாக வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


எனவே இவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், 071- 8592604, 0112-2685958 ஆகிய ​தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.