பாடசாலை மடிக்கணினிகளைத் திருடிய குற்றச்சாட்டில் ஐவர் கைது!

பாடசாலை மடிக்கணினிகளைத் திருடிய குற்றச்சாட்டில் ஐவர் கைது!


பாடசாலை ஒன்றின் அதிபரின் காரியாலயத்தை உடைத்து 6 புதிய மடிக்கணினிகளைத் திருடிய குற்றச்சாட்டில் ஐவர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதனையடுத்து சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.


கடந்த 05 ஆம் திகதி சம்மாந்துறை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் காரியாலயக் கதவை உடைத்து அங்கிருந்த அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தலா 150,000 பெறுமதியான 6 மடிக்கணினிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு முறைப்பாட்டு கிடைக்கப்பெற்றிருந்தது.


கடந்த முதலாம் திகதி இறுதியாக பாடசாலை நடைபெற்று அனைத்தும் பூட்டப்பட்டிருந்தது. பின்னர் தொடர்ச்சியாக 04 நாட்கள் விடுமுறையின் பின்னர் திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்ற அதிபர், பாடசாலையைத் திறக்க முற்பட்டபோது அதிபர் அறை உடைக்கப்பட்டு புதிய 06 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளமையை அவதானித்துள்ளார்.


இதற்கமைய பொலிஸாரிடம், அதிபர் முறைப்பாடு செய்ததற்கமைய பொலிஸ் குழுவினர் சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 20,23,25,30 வயதுடைய ஐவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட 06 மடிக்கணினிகள் மற்றும் உதிரிப்பாகங்களும் கைப்பற்றப்பட்டன.


அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரட்நாயக்கவின் உத்தரவின்பேரில் கல்முனைப்பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜயரட்னவின் ஆலோசனையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜயலத்தின் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன், பொலிஸ் சார்ஜன்ட் ஆரியசேன, குமாரசிங்க, பொலிஸ் கான்ஸ்டபிள்களான துரைசிங்கம், ஜகத் குழுவினரே இது தொடர்பான விசாரணை மேற்கொண்டிருந்தனர்.


-காரைதீவு நிருபர் சகா


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.