தீவிர சிகிச்சை (ICU) படுக்கையின்றி நாட்டில் முதல் கொரோனா தொற்றாளர் உயிரிழப்பு!

தீவிர சிகிச்சை (ICU) படுக்கையின்றி நாட்டில் முதல் கொரோனா தொற்றாளர் உயிரிழப்பு!

மாவனெல்லை ஆதார மருத்துவமனையின் மருத்துவரின் சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கையின்றி நேற்று (26) இறதுள்ளார்.

மாவனெல்ல ஆதார மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரின் சகோதரர், இருமல் மற்றும் சளி நோய்களுடன் சிகிச்சைக்காக கடந்த 24 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனடியாக படுக்கையொன்றை தேடிய போது, படுக்கையின்றி போனது. 

நோயாளி கடுமையாக நோய்வாய்ப்பட்ட நபர் மாரடைப்பால் இறந்தார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரேவில் இருந்து அவருக்கு நிமோனியா இருப்பது தெரியவந்தது.

கேகாலை பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளது, கொரோனா நோயாளிகள் மூவருக்கு தேவையான தீவிர சிகிச்சை பிரிவு இருந்த போதிலும், ஊழியர்களின் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. (எம். ஐ. மொஹமட்) (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.