சமையல் எரிவாயு (Gas) விலையில் என்ன நேர்ந்தது? முழு விபரம்!

சமையல் எரிவாயு (Gas) விலையில் என்ன நேர்ந்தது? முழு விபரம்!

அமைச்சர்களினால் சமையல் எரிவாயு (கேஸ்) விலை அதிகரிக்கப்படாது என குறிப்பிட்டிருந்தாலும் லிட்ரோ கேஸ் லிமிட்டன் நிறுவனம் ரூ 406.25 மேலதிகமாக அறவிடுகின்றது.

ரு. 1493 இலிருந்து ரூ. 1395 ஆக குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றிம் விலை ரூ 1493 ஆகும். அதாவது கிலோவொன்றுக்காக விலை ரூ. 119.44.

தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் கிலோகிராமில் விற்பனை செய்யாது லீட்டர்களில் (PREMIUM 18L) விற்பனை செய்யப்படுகின்றது. இதன் அடிப்படையில் 18 லீட்டர் கொள்ளலவுள்ள சிலிண்டரே சந்தையில் ரூ. 1395 இற்கி விற்பனையாகின்றது.

ஒரு லீட்டர் எரிவாயு 0.51 கிலோ கிராம் எரிவாயுவை கொண்டுள்ளது. ஆகவே 18 லீட்டர் எரிவாயுவானது 9.81 கிலோ கிராம் எடையய் உள்ளது. 9.81 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயுவிற்கு எம்மிடம் ரூ. 1395 அறவிடப்படுகின்றது. ஆகவே தற்போது கிலோவின்றின் விலை ரூ. 151.96 ஆக உயர்வடைந்துள்ளது.

அதாவது கிலோவொன்றுக்காக ரூ. 32.5 அதிகம் செலுத்துகின்றோம்.

இதன் அடிப்படையில்

12.5kg கேஸ் இன் விலை ரூ. 1899.5 ஆகவுள்ளது.

முன்பு 12.5kg கேஸ் இன் விலை ரூ. 1493 ஆக இருந்தது.

அதாவது நாம் ரூ. 406.25 அதிகம் செலுத்துகின்றோம்.

கேஸ் விலை குறைக்கப்படவில்லை. லீட்டரில் தந்து விலை குறைப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

மூலம் - Manushanyah Facebook Page

#LP_GAS_Sri_Lanka 🇱🇰🇱🇰🇱🇰 அமைச்சர்களினால் சமையல் எரிவாயு (கேஸ்) விலை அதிகரிக்கப்படாது என...

Posted by ManushanYah on Thursday, April 22, 2021

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.