
இராணுவத் தளபதி பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு இன்று காலை இராணுவ தளபதி அறிவுறுத்தினார்.
சிங்கள-தமிழ் புத்தாண்டு கால பகுதிகளில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பேணாது செயல்பட்டதால், பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகிவார்கள் எனவும், அடுத்த மூன்று வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் ஓரிரு வாரங்களில் புத்தாண்டு சமயங்களில் தொற்றுக்கு இலக்கானவர்கள் தொடர்பில் செய்திகள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.