மணமகன் மணமகளுக்கு கொரோனா - வைபவத்திற்கு வந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை!

மணமகன் மணமகளுக்கு கொரோனா - வைபவத்திற்கு வந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை!

திருமணத் தம்பதியினர் கொரோனா தொற்றாளர்காள அடையாளம் காணப்பட்டதை அடுத்து திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 150 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

வத்தளை – ஹெந்தளை பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன் றில் நடைபெற்ற திருமண வைபவத்தின் பின்னர் மணமகன் வெளிநாடு செல்வதற்காக பி.சி.ஆர். பரிசோதனை மேற் கொண்ட போது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப் பட்டுள்ளார்.

இதன் காரணமாகக் குறித்த மணப்பெண்ணுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொண்ட போது அவரும் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தம்பதியினருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் குறி த்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட மற்றும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்குத் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக் கப்படுகிறது.

இதனால் சுகாதாரத் துறையின் ஆலோசனைப்படி, திருமண வைபவத் தில் கலந்துகொண்ட 150 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப் படவுள்ளது.

இந்நிலையில் குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 150 பேரின் முகவரிகளைச் சுகாதார அதிகாரிகள் பெற்றுக்கொண்டு இது தொடர் பாகத் தகவல் விடுத்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.