நாடளாவிய முடக்கத்திற்கு இலங்கை???

நாடளாவிய முடக்கத்திற்கு இலங்கை???


இலங்கையில் புதிதாக உதயமாகிய கொரோனா பரவலின் அபாய நிலைமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியிலோ அல்லது சில பகுதிகளையோ முடக்குவது குறித்து இன்று (23) இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் வைத்திய நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் நாடு மூடப்படாவிட்டால் நிலைமை மோசமடையக்கூடும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். அதன்படி, எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்து ஜனாதிபதி இன்று இறுதி முடிவு எடுக்கவுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post