🚨 BREAKING : கொரோனா - நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

🚨 BREAKING : கொரோனா - நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் 30 வரை மூடப்படுவதாக அமைச்சர் மஹிந்தானந்த அமர்வீர இன்று (27) தெரிவித்தார்.

இன்று முன்னதாக, கேகாலை, அனுராதபுரம், அம்பாறை, மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிரும்ந்தது.

 அனுராதபுர மாவட்டத்தில் 13 பாடசாலைகள் ஏப்ரல் 30 வரை மூடப்படும் என்று வட மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்திருந்தார்.

 சபரகமுவ மாகாண சபையின் கீழ் கேகாலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என்று சபராகமுவ மாகாண ஆளுநர் தெரிவித்திருந்தார்.

 திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் கல்வி வலய அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்திருந்தார்.

 அம்பாறை மாவட்டத்தில் உள்ள மகா-ஓயா மற்றும் அம்பாறை கல்வி கல்வி வலய அனைத்து பாடசாலைகளும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என்று ஆளுநர் மேலும் தெரிவித்திருந்தார்.

 தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் கணிசமாக பரவி வருவதால் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.