🚫 புர்கா தடைக்கு அமைச்சரவை அனுமதி!

🚫 புர்கா தடைக்கு அமைச்சரவை அனுமதி!

புர்கா தடைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதாவது சுகாதார வழிகாட்டலுக்கு அமைவான முகக்கவசம் தவிர்ந்த புர்கா உட்பட நாட்டின் பாதுகாப்புக்கு அச்சம் விளைவிக்கும் அனைத்து முகத்தை மறைக்கும் முகக்கவசங்களினது தடைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் 13 புர்கா தடைக்கான பத்திரத்தில் கையொப்பமிட்டதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். 
 (யாழ் நியூஸ்). 
- எம். ஐ. மொஹ்மட்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post