இவர்களுக்கு தடுப்பூசி பெற்றிருந்தாலும் தனிமைப்படுத்தல் கட்டாயம்; கத்தார் அதிரடி அறிவிப்பு!

இவர்களுக்கு தடுப்பூசி பெற்றிருந்தாலும் தனிமைப்படுத்தல் கட்டாயம்; கத்தார் அதிரடி அறிவிப்பு!


கத்தார் நாட்டுக்கு பயணிக்கும் இலங்கையர்கள் கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும், கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதாக கத்தார் சுகாதார அமைச்சு நேற்று (26) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருதாவது,

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தது கத்தாருக்கு பயணிப்பவர்கள் அவர்களது நாடுகளில் உரிய தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி 06 நாடுகளைச் சேர்ந்தவர்களும், கத்தாருக்கு பயணிக்க 48 மணித்தியாலங்களிற்கு முன்னர் PCR பரிசோதனை செய்து எதிர்மறை சான்றிதழைப் பெற்றிருத்தல் வேண்டும்.  அத்துடன் கத்தாரில் அவர்கள் 10 அல்லது 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மேலும் அவர்கள் கத்தார் வந்து அடுத்த நாள் PCR பரிசோதனை செய்யப்படுவார்கள் என்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன் நாடுகளிலிருந்து கத்தாருக்கு வந்து, ஏனைய நாடுகளுக்குப் பயணிப்பவர்கள் கத்தார் விமான நிலையத்தில் 300 ரியால்கள் செலுத்தி PCR பரிசோதனை செய்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post