நாட்டில் கோழி இறைச்சியின் விலை இரு மடங்கு அதிகரிப்பு!!

நாட்டில் கோழி இறைச்சியின் விலை இரு மடங்கு அதிகரிப்பு!!


கோழி இறைச்சியின் விலை தற்போதைய விலையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.


ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி சந்தையில் 675 ரூபாய் முதல் 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.


கோழி இறைச்சியை அரசாங்கம் நிர்ணயித்த விலையில் மாத்திரம் விற்பனை செய்ய உற்பத்தியாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்ததாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தெரிவித்துள்ளார்.


ஒரு கிலோ பொய்லர் கோழி இறைச்சியின் நிர்ணய விலை 430 ரூபாய் எனவும், குளிரூட்டியில் வைக்காத ஒரு கிலோ கோழி இறைச்சியை 375 ரூபாவுக்கும் விற்பனையாளர்களுக்கு வழங்க உற்பத்தியாளர்கள் இணங்கி இருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.


இந்நிலையில், தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் விலை அதிகரித்திருப்பதால், அரசாங்கத்திற்கும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.