சிறைக்கு ரஞ்சனை பார்வையிடச் சென்ற நாமல் ராஜபக்ஷ!

சிறைக்கு ரஞ்சனை பார்வையிடச் சென்ற நாமல் ராஜபக்ஷ!


தற்போது சிறையில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று பார்வையிட்டார்.


சிறைச்சாலை வட்டார தகவல்களின் படி, முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.ரஞ்சனை ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு சென்று அமைச்சர் பார்வையிட்டார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருக்கும் ரஞ்சனை சந்தித்திருந்தார்.


ரஞ்சன் ராமநாயக்க விடுதலையைப் பெறுவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் உறுதிமொழி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.