நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு!!

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு!!


வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபை, வெஹரயாய, கொட்டம்கஹபொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகிய பிரதேசங்கள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.​

அதேபோல், புத்தல பிரதேசத்தை சேர்ந்த ரஹதன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு, உஹன பிரதேசத்தை சேர்ந்த குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த அலுகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்களும இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.​

கொரொனா பரவலை தடுக்கும் வகையில் குறித்த பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.