சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கைக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தினை நீடிக்க யோசனைகள் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருகை தருகின்றவர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அடையாளம் காண்பதற்கு இது உதவும் என பொது சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.எம். ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘வெளிநாட்டிலிருந்து வருகை தருகின்ற மக்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும்.

நாங்கள் தற்போது அதற்கான வேலையே செய்கிறோம். தனிமைப்படுத்தல் காலத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் காண தேவையான நேரத்தை இதனூடாக பெறுவதே நோக்கமாகும்.

இதேவேளை சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள கொவிட் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்றவில்லையெனின் பயணக் கட்டுப்பாடுகள் நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.