நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கண்டி மாவட்டத்தின் உடுநுவர, தெல்தோட்டை, கங்கவத்தகோரல, யட்டிநுவர, தும்பானே, உடுதும்புர, தொலுவ, மெததும்பர மற்றும் பாததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் மாவனல்லை மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்ககோரல மற்றும் ரத்தொட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.