இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆமை ஒன்று அடையாளம்!

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆமை ஒன்று அடையாளம்!

File Picture

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஆமை ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

சிவப்பு நிற மார்பைக் கொண்டுள்ள குறித்த ஆமை இனம், அமெரிக்காவிலிருந்து மீன் இறக்குமதியாளர்களால் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள குறித்த ஆமை இனம் நாட்டிலுள்ள பூர்வீக தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என விலங்கு ஆராய்ச்சி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த ஆமை இனம் நாட்டினுள் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலைகள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் தொடர்பிலான ஆய்வாளரான கலாநிதி என்சலம் டி சில்வா, வன விலங்கு திணைக்களத்திடம் கோரியுள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.