வாய் மெல்கம் உடையது; ஆனால் அந்த குரல் அவருடையது கிடையாது! உலப்பனே சுமங்கல தேரர்!

வாய் மெல்கம் உடையது; ஆனால் அந்த குரல் அவருடையது கிடையாது! உலப்பனே சுமங்கல தேரர்!

உலப்பனே சுமங்கல தேரர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து, சிலர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைப் பயன்படுத்துவதாக உலப்பனே சுமங்கல தேரர் குற்றஞ்சாட்டுகின்றார்.


கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கார்தினால் மெல்கம் நேற்று கருத்துக்களை வெளியிடவில்லை. அது எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு, கனவு காண்கின்ற ஒரு நபரின் குரலாகும் என்பதை அச்சமின்றி தெரிவித்துக் கொள்கின்றேன். 


வாய் மெல்கம் உடையதாக இருந்தாலும் அந்த குரல் அவருடையது கிடையாது. அவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதற்கு அவர் எந்த இனத்தை பிரதிநித்துவப்படுத்துகின்றார் கிறிஸ்தவ மக்களையாகும். 


ஆனால் அவர் பௌத்த மக்களை இலக்குவைத்து பிரபல்யம் அடைய முயற்சிக்கின்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post