திருமணமான அழகி கிரீடத்தை புஷ்பிகாவுக்கு மீண்டும் வழங்க முடிவு?‌

திருமணமான அழகி கிரீடத்தை புஷ்பிகாவுக்கு மீண்டும் வழங்க முடிவு?‌


2021 ஆம்‌ ஆண்டுக்கான இலங்கையின்‌ திருமணமான அழகு ராணிக்கான போட்டியில்‌ வெற்றி பெற்று முடிசூடியபோது, தற்போதைய உலக திருமணமான அழகு ராணி அதனை பலவந்தமாக பறித்து போட்டியில்‌ இரண்டாம்‌ இடத்தை பிடித்த போட்டியாளருக்கு கிரீடத்தினை அணிவித்ததாக கூறி புஷ்பிகா டி சில்வா எனும்‌ பெண்‌ கறுவாத்தோட்டம்‌ பொலிஸ்‌ நிலையத்தில்‌ முறைப்பாடு செய்துள்ளார்‌.


தனக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை இவ்வாறு பலவந்தமாக வேறு போட்டியாளர்‌ ஒருவருக்கு அணிவித்ததாக தெரிவித்தே குறித்த போட்டியின்‌ முடிசூடும்‌ விழா நிறைவடைந்த பின்னர்‌

தனது பெற்றோருடன்‌ இன்று (05) அதிகாலை இரண்டு மணியளவில்‌ அவர்‌ இவ்வாறு பொலிஸ்‌ நிலையத்தில் ‌முறைப்பாடு செய்துள்ளார்‌.


கிரீடம் பறிக்கப்பட்ட சம்பவத்துடன்‌ தொடர்புபட்ட உலக திருமணமான அழகி உள்ளிட்டோருக்கு எதிராகவே அவர்‌ இந்த முறைப்பாட்டைச்‌ செய்துள்ளார்‌.


இந்த முறைப்பாட்டை தொடர்ந்து கிரீடம் பறிக்கப்படும் போது தனது தலையில்‌ காயம்‌ ஏற்பட்டதாக தெரிவித்து புஷ்பிகா டி சில்வா வைத்தியசாலையில்‌ சிகிச்சைக்காக சென்றுள்ளார்‌.


2021 ஆம்‌ ஆண்டுக்கான இலங்கையின்‌ திருமணமான அழகியை தெரிவு செய்யும்‌ போட்டி தாமரை தடாகத்தில்‌ நேற்று நடைபெற்றது. இதன்போது இறுதி போட்டியில்‌ புஷ்பிகா டி சில்வா எனும்‌ பெண்‌ இலங்கையின்‌ திருமணமான அழகி எனும்‌ மகுடத்தை சூடினார்‌.


அவ்வாறு கிரீடம் அணிவிக்கப்பட்டு சில விநாடிகளில்‌ புஷ்பிகாவிடமிருந்து அந்த கிரீடம் பறிக்கப்பட்டது. உலக திருமணமான அழகி கரோலின்‌ ஜூரி அந்த கிரீடத்தினை

புஷ்பிகாவிடமிருந்து பறித்து இரண்டாமிடத்தை பிடித்த போட்டியாளருக்கு அணிவித்திருந்தார். 


புஷ்பிகா டி சில்வா திருமணமாகி விவாகரத்து பெற்றவர்‌ என்பதால்‌ போட்டி விதிமுறைகளின்‌ பிரகாரம்‌ அவர்‌ திருமணமான அழகியாக முடிசூட முடியாது என கூறியே குறித்த கிரீடம் பறிக்கப்பட்டது.


எவ்வாறாயினும்‌ புஷ்பிகா டி சில்வா, தான்‌ விவாகரத்து பெறவில்லை என்றும்‌ தனிப்பட்ட காரணங்களால்‌ தற்போது தனியாக தனது மகனுடன்‌ வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்‌. 


இந்நிலையில்‌, 2021 ஆம்‌ ஆண்டுக்கான இலங்கையின்‌ திருமணமான அழகியை தெரிவு செய்தவதற்காக நடத்தப்பட்ட போட்டி பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் குறித்த போட்டியின்‌ தேசிய ஒருங்கிணைப்பாளரான சந்திமால்‌ ஜயசிங்க, திருமணமான அழகி பட்டத்தை புஷ்பிகா டி சில்வாவுக்கு மீண்டும்‌ வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post