எரிவாயு சிலிண்டர் தொடர்பாக வெளியான புதிய தகவல்!

எரிவாயு சிலிண்டர் தொடர்பாக வெளியான புதிய தகவல்!


வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வுக்கு உட்பட்டு 18 லீற்றர் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை புதிய உற்பத்தியாக சந்தைக்கு அறிமுகப்படுத்த லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், நுகர்வோரின் அன்றாட தேவைகளுக்கு எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரை சந்தைக்கு வெளியிட லிட்ரோ எரிவாயு நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரை 1,493 ரூபாவுக்கு வாடிக்கையாளர்களின் விருப்பப்படி குறித்த முகவர்கள் ஊடாக பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 18 லீற்றர் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதாயின், புதிய உற்பத்தியின் செயல்திறன், அந்த சிலிண்டரில் உள்ள வாயுவின் அளவு மற்றும் விலை, தற்போது சந்தையில் உள்ள சிலிண்டர்களிடமிருந்து அந்த சிலிண்டரை வேறுபடுத்தி அறியக்கூடிய தன்மை, குறித்த விடயங்கள் முழுமைப்படுத்தப்பட வேண்டும்.

அதன்படி, சந்தையில் இருந்து வழமையான 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்ய முடியாவிட்டால் 1977 இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.