ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சிவஞானசோதி காலமானார்!

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சிவஞானசோதி காலமானார்!


சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் வே.சிவஞானசோதி உயிரிழந்துள்ளார்.


இவர் கொழும்பு – அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு (05) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


யாழ். சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட வே.சிவஞானசோதி பல அமைச்சுக்களில் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.


நல்லிணக்க அமைச்சு ஆகியவற்றில் செயலாளராகவும், பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், இறுதியில் சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் இவர் கடமையாற்றியிருந்தார்.


இவர் இந்து கலாச்சார அமைச்சு, பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, வடக்குச் செயலணி, நல்லிணக்க அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post