சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவு தொகை உயர்வு!

சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவு தொகை உயர்வு!


சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவு தொகை உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதுவரை காலமும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு மாதாந்தம் 2,000 ரூபா வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த தொகை 2,000 ரூபாவிலிருந்து 2,500 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு நாடாளுமன்றில் இன்று பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


வெகுவிரைவில் இந்தக் கொடுப்பனவு தொகை 2,500 ரூபாவாக உயர்த்தப்படும் என அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post