கொரோனா காரணமாக வெளிநாட்டில் மரணித்த இலங்கையர்கள் தொடர்பாக வெளியான செய்தி!
advertise here on top
advertise here on top

கொரோனா காரணமாக வெளிநாட்டில் மரணித்த இலங்கையர்கள் தொடர்பாக வெளியான செய்தி!


வெளிநாடுகளில் பணியாற்றி வந்த 122 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளில் பணியாற்றி வரும் 4,431 இலங்கையர்களுக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது எனவும், இதில் 4,071 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 14 நாடுகளில் பணியாற்றி வந்த 30,831 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


நாடு திரும்ப விரும்பும் அனைத்து வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்களுக்கும் அதற்கான வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.