ரிஷாத் ஏன் கைதானார்? வெளியானது தகவல்!

ரிஷாத் ஏன் கைதானார்? வெளியானது தகவல்!

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பினை பேணிய குற்றச்சாட்டு தொடர்பிலான சாட்சிகள் கிடைத்துள்ளதன் காரணமாகவே ரிசாட் பதியூதின் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியும் அடிப்படைவாத அமைப்புகளுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொண்டு செயற்பட்டுள்ள விடயங்கள் குறித்து சாட்சிகள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ரிசாட் குறித்த அனைத்து சாட்சிகளும் உள்ளன. அதுமாத்திரமன்றி மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவரின் மகன்மார் இருவர் தற்கொலை குண்டுதாரிகளாக இருந்துள்ளனர்.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியுடன் அடிப்படைவாத அமைப்புக்கள் சில இணக்கத்திற்கு வந்துள்ளன. இது குறித்து அனைத்து விடயங்களும் நிச்சயம் வௌியில் வரும். அதனால் இது எதிர்கட்சியை அடக்கும் முறை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post