கைலாசா நாட்டுக்குள் இந்தியர்களுக்கு அனுமதியில்லை! இலங்கையர்களுக்கு தடையில்லை! நித்யானந்தா அறிவிப்பு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைலாசா நாட்டுக்குள் இந்தியர்களுக்கு அனுமதியில்லை! இலங்கையர்களுக்கு தடையில்லை! நித்யானந்தா அறிவிப்பு?


கொரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரம் அடைந்திருப்பதால் இந்தியாவிலிருந்து கைலாசா வரும் பக்தர்களுக்குத் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபலமானவர் நித்தியானந்தா சுவாமி, சமீபத்தில் கைலாசா என்ற பெயரில் தனித் தீவு ஒன்றை உருவாக்கி, அதற்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அனைத்தையும் அறிவித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தார். 


மேலும், கைலாசாவில் வியாபாரம் செய்வதற்கான வழிவகைகளையும் அறிவித்திருந்தார். அதைப் பார்த்து கைலாசாவில் ஹோட்டல், டீக்கடை எனத் தொழில் செய்து பிழைக்க பலர் நித்தியானந்தாவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தனர்.


இது ஒருபுறமிருப்பினும் இன்றுவரை இந்த கைலாசா எங்கே இருக்கிறது என்பது புதிராகவே இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் அருகாமையிலுள்ள தனித் தீவு ஒன்றை நித்தியானந்தா சொந்தமாக வாங்கி கைலாசவாக மாற்றியிருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. 


கைலாசாவில் குடியேறிய நித்தியானந்தா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்திவருகிறார். சமீப காலமாக அவர் திருப்பதி 'ஏழுமலையான்' வேடத்தில் வெளியிட்ட சர்ச்சைப் புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகின. அதன் அதிர்வலைகள் அடங்குவதற்குள் தற்போது இந்தியர்களுக்கு கைலாசாவில் "NO ENTRY" என்று அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.


இந்நிலையில், கடந்த 19ஆம் திகதி, நித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. 


அதில், "கொரோனா நோய்த்தொற்றின் பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்திருப்பதால், கைலாசா நாட்டுக்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.


கைலாசாவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


அறிவிப்பு என்னவோ சீரியஸாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் "ஆளே இல்லாத டீக்கடையில யாருக்குடா டீ ஆத்துறார்" என்று நகைப்புக்குரியதாகவே பார்க்கப்படுகிறது.


-இந்திய ஊடகம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.