சமூக வலைதளங்களில் இனத்துரோக கருத்துக்களை வெளியிடுவோருக்கான சட்ட திருத்தம்!

சமூக வலைதளங்களில் இனத்துரோக கருத்துக்களை வெளியிடுவோருக்கான சட்ட திருத்தம்!


சமூக வலைதளங்களில் இனத்துரோக கருத்துக்களை வெளியிடுவோரை தண்டிக்க சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கடும்போக்குவாத மற்றும் பயங்கரவாத கருத்துக்களை சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் தரப்பினருக்கு தண்டனை வழங்கக் கூடிய வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லேரியா பிரதேசத்தில் இன்று (15) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சாசனத்தில் பேச்சு சுதந்திரம் காணப்பட்டது என்ற போதிலும் அதற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தற்போதைய சட்டத்தில் திருத்தங்களை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தக் கூடிய வகையில் பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இனவாதத்தை தூண்டும் இனத்துரோக செயற்பாடுகளில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.