இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் லெஜண்ட்ஸ் அணி இடையேயான போட்டி தொடர்பில் வெளியான மேலதிக தகவல்!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் லெஜண்ட்ஸ் அணி இடையேயான போட்டி தொடர்பில் வெளியான மேலதிக தகவல்!


இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையேயான கிரிக்கட் போட்டித் தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியாகின.


இந்த போட்டி மே 04 ஆம் திகதி கண்டி - பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.


இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்களான லெஜெண்ட்ஸ் அணிக்கும் தற்போதைய தேசிய அணிக்கும் இடையிலான போட்டியை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முன்னதாக முன்மொழிந்தார்.


இலங்கை லெஜண்ட்ஸ் அணி கடைசியாக இந்தியாவில் நடந்த வீதி  பாதுகாப்பு உலகத் தொடரில் விளையாடியது, இதில் அவர்கள் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி வரை போராடி அசத்தினர்.


இதற்கிடையில், இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் சர்வதேச மற்றும் மூன்று T20 போட்டிகளுடன் நாடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post