நாட்டில் எதிர்வரும் ஒரு வார காலத்துக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள் தொடர்பான விபரம்!

நாட்டில் எதிர்வரும் ஒரு வார காலத்துக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள் தொடர்பான விபரம்!


நாட்டில் நேற்றிலிருந்து (06) இலங்கைக்கு நேராகவே சூரியன் உச்சம் கொடுக்கிறது எனத் தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையிலும் உச்சம் கொடுக்குமென அறிவித்துள்ளது.


​அதனால், கொழும்பு, மல்வான, கொஸ்கம, சீதாவக்க, மடல்தெனிய, ரொஸல்ல, தலவாக்கலை, சீதாஎலிய, எட்டாம்பிட்டிய, பசறை, பொரலந்த மற்றும் பல்லடி கலப்புவ ஆகிய இடங்களிலேயே வெப்பமான காலநிலை அதிகரித்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலே குறிப்பிட்ட இடங்களில் எதிர்வரும் 14ஆம் திகதி வரையிலும் நண்பகல் 12.30க்கு சூரியன் உச்சம் கொடுக்குமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.


இக்காலப்பகுதியில், நாட்டின் மேற்​கு, சப்ரகமுவ மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பகல் வேளைகளில் அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post